முத்துவடுகநாதத் தேவர் 246 வது வீரவணக்க விழா மறத்தமிழர் சேனை சுவரொட்டிகள்
சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும் ; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக , ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி , பொன்.பாண்டித்துரை தேவர் , வேலு நாச்சியார் , கீழத்தூவல் தியாகிகள் ஐவர் , மன்னர் பாஸ்கர சேதுபதி , மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்...