மறத்தமிழர்  சேனையோடு தொகுதியில் தொடர்ந்து போராடி வருகின்ற தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் இரா.ஜெயச்சந்திரத் தேவர் அவர்களிடம் பேசிய போது.....
                      தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சங்கரன்கோவில் ,வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளை பொதுதொகுதியாக மற்ற வழியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்றது. இந்த தொகுதியை பொறுத்த வகையில் மொத்தமுள்ள 224 பூத்தில் 140 பூத்துகளில் மறவர்களும், 14 பூத்துகளில் தாழ்த்தப்பட்ட சமூகமும், மீதமுள்ள 70 பூத்துகளில் மற்ற அனைத்து சமூகங்களும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகிறார்கள்.
                                                                    எங்கள் சமூக மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் நாங்கள் போட்டியிட முடியாமல் இருக்கிறோம். தற்பொழுது இடைத்தேர்தல் நடைபெறுவதால் பொதுத்தொகுதியாக மாற்றப்படும் வரை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து இந்த தகவலை எங்கள் இனமக்களிடத்தில் எடுத்து செல்லும் விதமாக சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன்கோவில் திடலில் ஜனவரி -8 அன்று  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு  15 நாட்களுக்கு முன்பே  நகர் காவல் துறையிடம்    மனுகொடுத்திருந்தோம். ஆனால் நகர் காவல் துறையோ 8 ம்  தேதி காலைதான் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் தந்தது. எனவே தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு பார்வர்ட் பிளாக்,  மறத்தமிழர்  சேனை நிர்வாகிகளை கைது செய்ததோடு 39 பேர் மீது வழக்கும் போட்டது. 

            தற்போது எங்கள் கொள்கைகளை எடுத்து செல்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிவழங்க ஆணையிட வழியுறுத்தி மனுபோட்டுள்ளோம். அனுமதி கிடைக்கட்டும் எங்கள் பலம் அனைவருக்கும் புரியும் என்றார் 

Comments

Popular posts from this blog

Mukkulathor -மறத்தமிழர் சேனை